என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தஞ்சை கலெக்டர் அலுவலகம்"
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தினர் கஜா புயலால் சேதமான கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் கேட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க மண்டலத்தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 210 கோழிப்பண்ணைகள் சேதமடைந்தன.
இந்த கோழிப் பண்ணைகளுக்கு உரிய நிவாரணம் கேட்டு பலமுறை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலின் போது விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சேதமான 1200 கோழிப்பண்ணைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் 10 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கவில்லை எனில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களது கோரிக்கைளை விளக்கும் விதமாக, மக்களை தேடி என்ற போராட்டத்தை கடந்த 10-ந்தேதி முதல் நடத்தி வருகின்றனர்.
50 சதவீகித பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வேண்டும், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி, இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களில் இறப்பு சான்றிதழ், பட்டா சாதி சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
11-வது நாளான இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நிர்வாகிகள் விஜயபாஸ்கர், தஞ்சாவூர் பத்மநாபன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்து மனு கொடுத்தனர்.
தஞ்சையை அடுத்த பிள்ளையார் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பிள்ளையார்பட்டி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு 6 ஏரிகள் மற்றும் 16 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் ஏரிகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளன.
ஒரே ஒரு ஆழ்துளை கிணற்றில் மட்டும் தண்ணீர் உள்ளது. அதை எடுத்து அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. பிள்ளையார்பட்டி பகுதியில் கல்லணை கால்வாய் செல்கிறது. அதில் தற்போது அதிகளவில் தண்ணீர் செல்கிறது. எனவே ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கும்பகோணம் அடுத்த திருப்புவனம் பூக்கொல்லை தெரு மற்றும் தென்றல் தெருவை சேர்ந்த பெண்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்புவனம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் பெண்களுக்கும் இடையூறு ஏற்படும். எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
எங்கள் கோரிக்கையை மீறி அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் அனைவரும் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
தஞ்சை வடக்கு வாசல் ரோகிணி காலனியில் வசிக்கும் துப்புரவு பணியாளர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் தான் வழங்கபடுகிறது.
இதை வைத்து எங்களது குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. மற்றும் வீட்டு வாடகை, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். நாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு மேலாக அதிகமாக வேலை பார்த்து வருகிறோம்.
எங்களது நலனை கருத்தில் கொண்டு கூடுதல் சம்பளம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
தஞ்சாவூர்:
தஞ்சையில் சி.ஐ.டி.யூ - ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் துவக்கவுரை ஆற்றினார். சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்களுககு ஒருநாள் ஊதியம் ரூ.432,16 அடிப்படையில் மாதம் ரூ.13238 வழங்க வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 231, பஞ்சப்படி ரூ.124.16, நாள் ஒன்றுக்கு ரூ.355.16 வீதம் மாதம் 9,234.16 வழங்க வேண்டும். டெங்கு கொசு புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ - ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் கொடுத்து விட்டு கலெக்டர் அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்